ஈரோட்டில் மாநில அளவிலான கால்பந்து போட்டி 9 மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்பு


ஈரோட்டில் மாநில அளவிலான கால்பந்து போட்டி 9 மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Dec 2016 10:00 PM GMT (Updated: 31 Dec 2016 9:07 PM GMT)

ஈரோடு, ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 9 மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. கால்பந்து போட்டி ஈரோடு மாவட்ட டாக்டர் அம்பேத்கர்

ஈரோடு,

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 9 மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

கால்பந்து போட்டி

ஈரோடு மாவட்ட டாக்டர் அம்பேத்கர் கால்பந்துக்குழு சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி ஈரோட்டில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுகான போட்டி ஈரோடு மரப்பாலத்தில் உள்ள மகாஜன பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை முன்னாள் கவுன்சிலர் சம்பத் தொடங்கி வைத்தார்.

இதில் ஈரோடு, சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

பரிசளிப்பு விழா

இதில் ஏ-பிரிவில் 12 அணிகள், பி-பிரிவில் 12 அணிகள் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4 ஆயிரமும் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்படுகிறது.

Next Story