தெற்காசிய பெண்கள் கால்பந்து இறுதிப்போட்டியில் இந்திய அணி


தெற்காசிய பெண்கள் கால்பந்து இறுதிப்போட்டியில் இந்திய அணி
x
தினத்தந்தி 2 Jan 2017 8:30 PM GMT (Updated: 2 Jan 2017 8:06 PM GMT)

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சிலிகுரியில் நடந்து வருகிறது.

சிலிகுரி,

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சிலிகுரியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் கமலாதேவி 45-வது நிமிடத்திலும், இந்துமதி 58-வது நிமிடத்திலும், சஸ்மிதா மாலிக் 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நேபாள அணி சார்பில் சபித்ரா பண்டாரி பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார். 

Next Story