சர்வதேச நட்புறவு கால்பந்து: இந்தியா-கம்போடியா அணிகள் இன்று மோதல்


சர்வதேச நட்புறவு கால்பந்து: இந்தியா-கம்போடியா அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 21 March 2017 9:30 PM GMT (Updated: 21 March 2017 8:09 PM GMT)

சர்வதேச நட்புறவு கால்பந்து: இந்தியா-கம்போடியா அணிகள் இன்று மோதல்

பனோம்பென், 

இந்தியா-கம்போடியா அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கம்போடியாவில் உள்ள பனோம்பென்னில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது. கடைசியாக இந்திய அணி, அன்னிய மண்ணில் 2006-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் புதிய சரித்திரம் படைக்கும்.

போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் செயற்கை இழை மைதானத்தில் விளையாடுகிறோம். அதற்கு தகுந்த படி நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஆசிய கால்பந்து பெடரேஷன் கோப்பை தகுதி சுற்று போட்டியில் மியான்மருக்கு எதிராக விளையாட இருக்கும் நிலையில் நடைபெறும் இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 4-5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆடும் லெவன் அணி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மியான்மரில் நிலவும் தட்பவெப்பநிலையை ஒத்த சூழ்நிலை தான் இங்கும் உள்ளது. இதனால் இந்த ஆட்டம் எங்களுக்கு நல்ல சோதனை களமாக இருக்கும்.’ என்றார்.

Next Story