சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: சென்னை விவா அணி வெற்றி


சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: சென்னை விவா அணி வெற்றி
x
தினத்தந்தி 22 March 2017 11:15 PM GMT (Updated: 22 March 2017 7:25 PM GMT)

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை விவா அணி 2–0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி 4–வது வெற்றியை பெற்றது. 5–வது லீக்கில் ஆடிய இந்தியன் வங்கி அணிக்கு இது முதல் தோல்வியாகும். விவா அணியில் பசந்த் ராய், மைக்கேல் லக்யூ கோல் அடித்தனர்.

முதல் டிவிசன் லீக்கில் ஆரோஸ் அணி 2–0 என்ற கோல் கணக்கில் எஸ்.டி.எஸ். அணியை தோற்கடித்தது. லெவன் வாரியர்ஸ்– ரங்கூன் எப்.சி. இடையிலான ஆட்டம் கோல் எதுவும் இன்றி டிராவில் முடிந்தது. இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் சீனியர் டிவிசனில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன்– சென்னை எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.


Next Story