ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: கொல்கத்தாவில் இறுதிப்போட்டி


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: கொல்கத்தாவில் இறுதிப்போட்டி
x
தினத்தந்தி 27 March 2017 9:45 PM GMT (Updated: 27 March 2017 7:29 PM GMT)

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (ஜூனியர்) உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 6–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது. கொல்கத்தா, டெல்லி, கவுகாத்தி, கோவா, கொச்சி, நவிமும்பை ஆகிய 6 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு

கொல்கத்தா,

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (ஜூனியர்) உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 6–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது. கொல்கத்தா, டெல்லி, கவுகாத்தி, கோவா, கொச்சி, நவிமும்பை ஆகிய 6 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்த சர்வதேச கால்பந்து சங்க நிர்வாகிகள் போட்டியின் முதல் கட்ட அட்டவணையை அறிவித்துள்ளனர். போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்படுகின்றன. நவிமும்பையில் ‘ஏ’ பிரிவு ஆட்டமும், டெல்லியில் ‘பி’ பிரிவு ஆட்டமும், கோவாவில் ‘சி’ பிரிவு ஆட்டமும், கொச்சியில் ‘டி’ பிரிவு ஆட்டமும், கவுகாத்தியில் ‘இ’ பிரிவு ஆட்டமும், கொல்கத்தாவில் ‘எப்’ பிரிவு ஆட்டமும் நடக்கிறது. இதன் இறுதிப்போட்டி அக்டோபர் 28–ந் தேதி கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடக்கிறது. நவிமும்பை மற்றும் கவுகாத்தியில் அரைஇறுதிப்போட்டிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு 2–வது சுற்று ஆட்டமும், கோவா, கவுகாத்தி, கொச்சி, கொல்கத்தாவில் கால்இறுதி ஆட்டங்களும் அரங்கேறுகிறது. தொடக்க நாள் லீக் ஆட்டங்கள் நவிமும்பை, டெல்லியில் (அக்டோபர் 6–ந் தேதி) நடக்கிறது. இந்த போட்டியில் எந்தெந்த அணிகள் எந்த பிரிவில் இடம் பெறும். எந்த அணியுடன் மோதும் என்பது? மும்பையில் ஜூலை 7–ந் தேதி நடைபெறும் டிரா (குலுக்கல்) மூலம் முடிவு செய்யப்படும்.


Next Story