சீனியர் டிவிசன் கால்பந்து: சுங்க இலாகா–வருமானவரி ஆட்டம் டிரா


சீனியர் டிவிசன் கால்பந்து: சுங்க இலாகா–வருமானவரி ஆட்டம் டிரா
x
தினத்தந்தி 15 April 2017 8:39 PM GMT (Updated: 15 April 2017 8:39 PM GMT)

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியில், நேற்று நடந்த சுங்க இலாகா–வருமான வரி அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சென்னை,

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியில், நேற்று நடந்த சுங்க இலாகா–வருமான வரி அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த முதல் டிவிசன் லீக் ஆட்டத்தில் லெவன் வாரியர்ஸ் அணி 5–1 என்ற கோல் கணக்கில் சென்னை தபால் துறை அணியை தோற்கடித்தது. இன்று நடக்கும் சீனியர் டிவிசன் லீக்கில் இந்தியன் வங்கி–மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் (மாலை 5 மணி), முதல் டிவிசன் லீக்கில் ஒய்.எம்.எஸ்.சி.–மத்திய கலால் வரி (பிற்பகல் 2.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story