சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: விவா சென்னை அணிக்கு 8-வது வெற்றி


சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: விவா சென்னை அணிக்கு 8-வது வெற்றி
x
தினத்தந்தி 21 April 2017 7:53 PM GMT (Updated: 21 April 2017 7:52 PM GMT)

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சீனியர் டிவிசனில், நேற்று நடந்த ஆட்டத்தில் விவா சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை யுனைடெட் அணியை வீழ்த்தியது. 10-வது ஆட்டத்தில் ஆடிய விவா சென்னை அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். முதல் டிவிசன் ஆட்டத்தில் ஒய்.எம்.எஸ்.சி. அணி 6-0 என்ற கோல் கணக்கில் சென்னை தபால் துறை அணியை தோற்கடித்தது. இன்று நடைபெறும் சீனியர் டிவிசன் லீக்கில் இந்தியன் வங்கி-ஏ.ஜி.அலுவலகம் (மாலை 5 மணி), முதல் டிவிசன் லீக்கில் லெவன் வாரியர்ஸ்-ரிசர்வ் வங்கி அணிகள் மோதுகின்றன. 

Next Story