கோபா டெல்ரே கால்பந்து: பார்சிலோனா ‘சாம்பியன்’


கோபா டெல்ரே கால்பந்து: பார்சிலோனா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 28 May 2017 8:02 PM GMT (Updated: 28 May 2017 8:02 PM GMT)

ஸ்பெயினில் ஆண்டுதோறும் கோபா டெல்ரே கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதில் 2016–17–ம் ஆண்டு சீசனுக்கான இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா– ஆலாவ்ஸ் அணிகள் நேற்று முன்தினம் இரவு மாட்ரிட்டில் மோதின. லயோனல் மெஸ்சி(30–வது நிமிடம்), நெய்மார் (45–வது நிமிடம

மாட்ரிட்,

ஸ்பெயினில் ஆண்டுதோறும் கோபா டெல்ரே கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதில் 2016–17–ம் ஆண்டு சீசனுக்கான இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா– ஆலாவ்ஸ் அணிகள் நேற்று முன்தினம் இரவு மாட்ரிட்டில் மோதின. லயோனல் மெஸ்சி(30–வது நிமிடம்), நெய்மார் (45–வது நிமிடம்), அல்காசெர் (45–வது நிமிடம்) ஆகியோர் அடித்த கோல்களின் உதவியுடன் நட்சத்திர கிளப்பான பார்சிலோனா 3–1 என்ற கோல் கணக்கில் ஆலாவ்ஸ் அணியை வீழ்த்தி இந்த கோப்பையை 29–வது முறையாக கைப்பற்றியது.


Next Story