சர்வதேச நட்புறவு கால்பந்து இந்திய அணி வெற்றி 2–0 கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது


சர்வதேச நட்புறவு கால்பந்து இந்திய அணி வெற்றி 2–0 கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது
x
தினத்தந்தி 6 Jun 2017 8:42 PM GMT (Updated: 6 Jun 2017 8:42 PM GMT)

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வருகிற 13–ந் தேதி கிர்கிஸ்தானை சந்திக்கிறது.

மும்பை,

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வருகிற 13–ந் தேதி கிர்கிஸ்தானை சந்திக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, நேபாளம் அணியுடன் மோதிய சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி மும்பையில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பின்பாதி ஆட்டத்தில் இந்திய அணி 2 கோல்கள் அடித்தது. சந்தேஷ் ஜிகன் 60–வது நிமிடத்திலும், ஜெஜெ லால்பெகுலா 77–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நேபாள அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது. 67–வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் காரணமாக நேபாள அணி வீரர் பிராஜ் மகராஜன் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் ஆடியது. அந்த நேரத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பிரிகிக் வாய்ப்பை கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணடித்தனர்.


Next Story