தந்தை ஆன பிறகு திருமணம் செய்யும் மெஸ்சி


தந்தை ஆன பிறகு திருமணம் செய்யும் மெஸ்சி
x
தினத்தந்தி 10 Jun 2017 8:46 PM GMT (Updated: 10 Jun 2017 8:46 PM GMT)

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி வருகிற 30–ந்தேதி தனது நீண்ட கால காதலியான ஆன்டோனிலா ரோக்குஜோவை சொந்த ஊரான ரோசாரியோ நகரில் கரம் பிடிக்கிறார்.

ரோசாரியோ,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி வருகிற 30–ந்தேதி தனது நீண்ட கால காதலியான ஆன்டோனிலா ரோக்குஜோவை சொந்த ஊரான ரோசாரியோ நகரில் கரம் பிடிக்கிறார். இவர்கள் இணைந்து வாழ்ந்ததன் பலனாக ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பிறகு திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள். 29 வயதான மெஸ்சி பார்சிலோனா கிளப்புக்காக ஆடுகிறார். அந்த கிளப்பை சேர்ந்த நெய்மார், லூயிஸ் சுவாரஸ், ‌ஷவி ஹெர்னாண்டஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அவரது திருமண விழாவில் கலந்து கொள்கிறார்கள்.


Next Story