கான்பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் ஜெர்மெனி


கான்பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் ஜெர்மெனி
x
தினத்தந்தி 26 Jun 2017 6:52 AM GMT (Updated: 26 Jun 2017 6:52 AM GMT)

கான்பெடரேஷன் கோப்பை போட்டியில் கேமரூனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஜெர்மெனி

ரஷ்யா,

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா, ஜெர்மெனி, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் பங்குபெற்றுள்ளன. 

இத்தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஜெர்மெனியும் கேமரூனும் விளையாடின. இப்போட்டியில் ஜெர்மெனி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மெனி தரப்பில் டெமிர்பே ஒரு கோலும், வெர்னர் இரண்டு கோலும் அடித்தனர். கேமரூனின் அபுபக்கர் ஒரு கோல் அடித்தார்.

வருகிற ஜூன் 29 நடைபெரும் அரையிறுதி போட்டியில் ஜெர்மெனி, மெக்ஸிகோவை எதிர்கொள்கிறது. 28-ம் தேதி நடைபெறும்  மற்றொரு அரையிறுதி போட்டியில் போர்ச்சுக்கலும் சிலியும் மோதுகின்றன. இறுதிபோட்டி வருகிற ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது.

Next Story