ஐரோப்பிய பெண்கள் கால்பந்து ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் அதிர்ச்சி தோல்வி


ஐரோப்பிய பெண்கள் கால்பந்து ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 31 July 2017 9:45 PM GMT (Updated: 31 July 2017 7:29 PM GMT)

ஐரோப்பிய பெண்கள் கால்பந்து போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

ரோட்டர்டாம்,

ஐரோப்பிய பெண்கள் கால்பந்து போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தொடர்ச்சியாக 6 முறை சாம்பியனான ஜெர்மனி அணி 1-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. ஜெர்மனி அணியில் கெர்ஷோவ்ஸ்கி 3-வது நிமிடத்தில் கோல் அடித்தார். டென்மார்க் அணி தரப்பில் நாடியா நாதிம் 48-வது நிமிடத்திலும், தெரசா நெல்சன் 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. கடந்த 43 ஆண்டுகளில் பிரான்ஸ் அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 5-3 என்ற கணக்கில் ஸ்பெயினை துவம்சம் செய்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 

Next Story