ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2017 9:15 PM GMT (Updated: 22 Sep 2017 7:24 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.

கோவா,

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், அமெரிக்கா, கொலம்பியா, கானா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை டெல்லியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோல் கீப்பர்கள்: தீரஜ்சிங், பிரப்சுஹான், சன்னி தலிவால், பின்களம்: போரிஸ் சிங், ஜிதேந்திரசிங், அன்வர் அலி, சஞ்சீவ் ஸ்டாலின், ஹென்றி அந்தோணி, நமித் தேஷ்பாண்டே, நடுகளம்: சுரேஷ்சிங், நிந்தோங்கன்பா மீட்டே, அமர்ஜித்சிங் கியாம், அபிஜித் சர்கார், கோமல் தாதல், லாலெங்மாவியா, ஜாக்சன்சிங், நோங்டம்பா, ராகுல் கனோல் பிரவீன், ஷாஜகான், முன்களம்: ரஹிம் அலி, அனிகெட் ஜாதவ்.

Next Story