ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனி-கொலம்பியா, அமெரிக்கா-பராகுவே மோதல்


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனி-கொலம்பியா, அமெரிக்கா-பராகுவே மோதல்
x
தினத்தந்தி 15 Oct 2017 11:15 PM GMT (Updated: 15 Oct 2017 8:46 PM GMT)

இந்தியாவில் நடந்து வரும் 17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் (17 வயதுக்குட்பட்டோர்) லீக் சுற்று முடிவில்

புதுடெல்லி,

 கானா, கொம்பியா, அமெரிக்கா (ஏ பிரிவு), பராகுவே, மாலி (பி), ஈரான், ஜெர்மனி (சி), பிரேசில், ஸ்பெயின், நைஜர் (டி), பிரான்ஸ், ஜப்பான், ஹோண்டுராஸ் (இ), இங்கிலாந்து, ஈராக், மெக்சிகோ (எப்) ஆகிய 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இந்தியா உள்பட 8 அணிகள் முதல் சுற்றுடன் நடையை கட்டின.

இந்த நிலையில் 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இனி நாக்-அவுட் சுற்று என்பதால் ஆட்டம் சமனில் முடிந்தால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்படும். இதில் கூடுதல் நேரம் வழங்கப்படாது.

2-வது சுற்றின் முதல் நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கின்றன. டெல்லி நேரு ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியும், கொலம்பியாவும் மோதுகின்றன.

லீக் சுற்றில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி கண்ட இவ்விரு அணிகளும் தரத்திலும், அனுபவத்திலும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் கடும் சவால் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவும், பராகுவேயும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வெற்றி பெறும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும்.

Next Story