அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் பட்டேலை தேர்வு செய்தது செல்லாது


அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் பட்டேலை தேர்வு செய்தது செல்லாது
x
தினத்தந்தி 31 Oct 2017 9:55 PM GMT (Updated: 31 Oct 2017 9:55 PM GMT)

அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் பட்டேல் கடந்த ஆண்டு 3–வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

புதுடெல்லி,

அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் பட்டேல் கடந்த ஆண்டு 3–வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். தேசிய விளையாட்டு கொள்கைக்கு மாறாக பிரபுல் பட்டேல் தேர்வு செய்து இருப்பதாகவும், அவரது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வக்கீல் ராகுல் மெக்ரா டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதிகள் ரவிந்திர பாத், நஜ்மி வாஜிரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேசிய விளையாட்டு கொள்கையை பின்பற்றாமல் நடத்தப்பட்ட அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் தேர்தல் (பிரபுல் பட்டேல் தேர்வு) செல்லாது என்றும் புதிய தேர்தலை 5 மாத காலத்துக்குள் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகியாக முன்னாள் தலைமை தேர்தல் கமி‌ஷனர் குரேஷியை நியமித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story