கொச்சியில் தொடக்க விழா: ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது


கொச்சியில் தொடக்க விழா: ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது
x
தினத்தந்தி 2 Nov 2017 10:30 PM GMT (Updated: 2 Nov 2017 6:42 PM GMT)

10 அணிகள் பங்கேற்கும் 4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் 17–ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2018) மார்ச் 17–ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

திருவனந்தபுரம்,

10 அணிகள் பங்கேற்கும் 4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் 17–ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2018) மார்ச் 17–ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதன் இறுதிப்போட்டி மார்ச் 17–ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என்று ஐ.எஸ்.எல். நிர்வாகம் நேற்று அறிவித்தது. சமீபத்தில் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரசிகர்களும் அதிக அளவில் வந்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே கொல்கத்தாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேரளா பிளாஸ்டர்ஸ்– அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான தொடக்க லீக் ஆட்டம் நவம்பர் 17–ந்தேதி கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டது. அது இப்போது கொச்சி நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடக்க விழாவும் கொச்சியில் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் பங்கேற்க வரும்படி கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனை, கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் நேற்று திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். தெண்டுல்கருடன் அவரது மனைவி அஞ்சலி, கேரள அணியின் தலைமை செயல் அதிகாரி வருண் திரிபுரனெனி, இயக்குனர் என்.பிரசாத் ஆகியோரும் சென்றிருந்தனர்.


Next Story