இத்தாலி கால்பந்து வீரர் பிர்லோ ஓய்வு


இத்தாலி கால்பந்து வீரர் பிர்லோ ஓய்வு
x
தினத்தந்தி 7 Nov 2017 9:06 PM GMT (Updated: 8 Nov 2017 9:42 AM GMT)

இத்தாலி கால்பந்து வீரர் ஆன்ட்ரியோ பிர்லோ. 38 வயதான இவர் இத்தாலி அணிக்காக 116 போட்டிகளில் விளையாடி 13 கோல்கள் அடித்துள்ளார்.

ரோம்,

இத்தாலி கால்பந்து வீரர் ஆன்ட்ரியோ பிர்லோ. 38 வயதான இவர் இத்தாலி அணிக்காக 116 போட்டிகளில் விளையாடி 13 கோல்கள் அடித்துள்ளார். 2006–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இத்தாலி அணியிலும் அங்கம் வகித்தார். ‘பிரி கிக்’ அடிப்பதில் வல்லவரான பிர்லோ, தேசிய அணியில் இருந்து விடைபெற்றாலும், கிளப் அளவிலான போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். கடைசியாக நியூயார்க் சிட்டி கிளப்புக்காக ஆடிய ஆன்ட்ரியோ பிர்லோ, கிளப் உள்ளிட்ட அனைத்து வகையிலான கால்பந்து போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.


Next Story