ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி வீரருக்கு 2 ஆட்டத்தில் ஆட தடை 3 லட்சம் அபராதமும் விதிப்பு


ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி வீரருக்கு 2 ஆட்டத்தில் ஆட தடை 3 லட்சம் அபராதமும் விதிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2017 8:30 PM GMT (Updated: 5 Dec 2017 8:10 PM GMT)

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டியில் கோவாவில் கடந்த 30–ந் தேதி நடந்த 12–வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா–பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

புதுடெல்லி,

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டியில் கோவாவில் கடந்த 30–ந் தேதி நடந்த 12–வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா–பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 40–வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்து, கோவா அணி வீரர் மானுல் லான்ஜரோட்டை முரட்டுத்தனமாக தள்ளி விட்டார். இதனால் அவர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் பெங்களூரு அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் கொச்சி அணி 4–3 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது.

குர்பிரீத்சிங் சந்துவின் விதிமுறை மீறல் புகார் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் ஐ.எஸ்.எல். போட்டியில் அடுத்த 2 ஆட்டங்களில் விளையாட குர்பிரீத்சிங் சந்துக்கு தடையும், ரூ.3 லட்சம் அபராதமும் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விதித்துள்ளது. நடவடிக்கை முடிவு குறித்த தகவல் கிடைத்த 10 நாட்களுக்குள் அபராத தொகையை அகில இந்திய கால்பந்து சங்கத்தில் செலுத்த வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் விளையாட விதிக்கப்பட்ட தடை அடுத்த 2 ஆட்டத்துக்கு பிறகும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story