ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை


ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை
x
தினத்தந்தி 18 Jan 2018 8:45 PM GMT (Updated: 18 Jan 2018 8:29 PM GMT)

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது.

மும்பை,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி (43, 52-வது நிமிடம்), மிகு (63-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டர். 11-வது லீக்கில் விளையாடி 7-வது வெற்றியை பெற்ற பெங்களூரு அணி 21 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை சிட்டிக்கு இது 5-வது தோல்வியாகும்.

இன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

Next Story