18 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது


18 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 9 Feb 2017 9:30 PM GMT (Updated: 9 Feb 2017 9:13 PM GMT)

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது.

சென்னை, 

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஐ.சி.எப்., தெற்கு ரெயில்வே, இந்தியன் வங்கி, மத்திய கலால் வரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஏ.ஜி.அலுவலகம், லயோலா, ஸ்டேட் வங்கி, வெஸ்லி கிளப், குன்னூர் லெவன் உள்பட 18 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘நாக்-அவுட்’ முறையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.70 லட்சமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.70 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இது தவிர 5 சிறந்த வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 

Next Story