மாநில ஆக்கி போட்டி இந்தியன் வங்கி அணி வெற்றி


மாநில ஆக்கி போட்டி இந்தியன் வங்கி அணி வெற்றி
x
தினத்தந்தி 15 Feb 2017 9:24 PM GMT (Updated: 15 Feb 2017 9:23 PM GMT)

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை பல்கலைக்கழக அணி 5–0 என்ற கோல் கணக்கில் ஜி.கே.மோட்டார்ஸ் (மதுரை) அணியை தோற்கடித்தது. சென்னை பல்கலைக்கழக அணி தரப்பில் வீரதிருமுருகன் 3 கோலும், சரவணகுமார் 2 கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 6–1 என்ற கோல் கணக்கில் திருநகர் கிளப் (மதுரை) அணியை சாய்த்தது. இந்தியன் வங்கி அணியில் பிலிப் மார்ட்டின், தமிழ்அரசன், வி.ராஜா தலா 2 கோல்கள் அடித்தனர். திருநகர் கிளப் தரப்பில் வசந்த் ஒரு கோல் திருப்பினார். இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் ஐ.சி.எப்.–இந்தியன் வங்கி (காலை 6.30 மணி), தெற்கு ரெயில்வே–சென்னை பல்கலைக்கழகம் (காலை 8 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி–வருமானவரி (பிற்பகல் 2 மணி), மத்திய கலால் வரி–தமிழ்நாடு போலீஸ் (பிற்பகல் 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story