மாநில ஆக்கி போட்டி: இறுதிப்போட்டியில் கலால் வரி அணி


மாநில ஆக்கி போட்டி: இறுதிப்போட்டியில் கலால் வரி அணி
x
தினத்தந்தி 17 Feb 2017 8:49 PM GMT (Updated: 17 Feb 2017 8:48 PM GMT)

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–மத்திய கலால் வரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மத்திய கலால் வரி அணி 6–4 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் வருமான வரி அணி 4–3 என்ற கோல் கணக்கில் சென்னை பல்கலைக்கழக அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் மத்திய கலால் வரி–வருமான வரி (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியன் வங்கி–சென்னை பல்கலைக்கழக அணிகள் (பகல் 1 மணி) சந்திக்கின்றன.


Next Story