மாநில ஆக்கி போட்டி: அரை இறுதியில் ஐ.ஓ.பி, இந்தியன் வங்கி


மாநில ஆக்கி போட்டி:  அரை இறுதியில் ஐ.ஓ.பி, இந்தியன் வங்கி
x
தினத்தந்தி 13 March 2017 9:29 PM GMT (Updated: 13 March 2017 9:29 PM GMT)

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான அழைப்பு ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

3–வது நாளான நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி)–லயோலா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி 8–5 என்ற கோல் கணக்கில் லயோலா கல்லூரியை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறியது. ஐ.ஓ.பி. அணியில் ரபீல், ஹர்மன்பிரீத்சிங், முத்துசெல்வன், வினோத் ராயர், அபிஷேக், மங்கல், பிட்டப்பா, ரபீக் தலா ஒரு கோல் அடித்தனர். லயோலா அணியில் ராஜா, சந்தீப், அக்‌ஷய், நாக அர்ஜூன், சிவகுரு தலா ஒரு கோல் திருப்பினார்கள். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 1–0 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. 70–வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியன் வங்கி வீரர் ஞானவேல் வெற்றிக்கான கோலை அடித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் சாய்–மத்திய கலால் வரி (பிற்பகல் 2 மணி), தெற்கு ரெயில்வே–ஐ.சி.எப். (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story