உலக பெண்கள் ஆக்கி லீக்: அரைஇறுதியில் இந்தியா-பெலாரஸ் இன்று மோதல்


உலக பெண்கள் ஆக்கி லீக்: அரைஇறுதியில் இந்தியா-பெலாரஸ் இன்று மோதல்
x
தினத்தந்தி 7 April 2017 9:15 PM GMT (Updated: 7 April 2017 7:26 PM GMT)

முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-பெலாரஸ் அணிகள் மோதுகின்றன.

வான்கோவெர்,

பெண்கள் உலக ஆக்கி லீக் (ரவுண்ட் 2) போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-பெலாரஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரைஇறுதியில் சிலி-உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ராணி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த போட்டி தொடரில் அரைஇறுதிக்கு முன்னேறியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன் சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்குடன் தான் இங்கு வந்துள்ளோம். பெண்கள் உலக லீக் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதே எங்கள் இலக்காகும். நாளைய (இன்றைய) ஆட்டத்துக்கு நன்றாக தயாராகி இருக்கிறோம்’ என்றார். 

Next Story