பெண்கள் உலக ஆக்கி லீக்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


பெண்கள் உலக ஆக்கி லீக்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 9 April 2017 9:15 PM GMT (Updated: 9 April 2017 8:41 PM GMT)

பெண்கள் உலக ஆக்கி லீக் (ரவுண்ட் 2) போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி, பெலாரசை சந்தித்தது.

வான்கோவெர்

பெண்கள் உலக ஆக்கி லீக் (ரவுண்ட் 2) போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி, பெலாரசை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பெலாரசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியில் கேப்டன் ராணி (20 மற்றும் 40-வது நிமிடம்), குர்ஜித் கவுர் (13, 58-வது நிமிடம்) ஆகியோர் தலா 2 கோல் அடித்தனர். பெலாரசுக்கு 5 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் அவற்றை கோட்டை விட்டனர். இந்திய அணியின் தற்காப்பு ஆட்டம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இந்திய கோல் கீப்பர் சவிதா எதிரணியின் பல முயற்சிகளை முறியடித்து பிரமாதப்படுத்தினார். மற்றொரு அரைஇறுதியில் சிலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-சிலி அணிகள் மோதுகின்றன.

பெண்களுக்கான உலக ஆக்கி லீக்கின் அடுத்த சுற்று (அரைஇறுதி) ஜூன்-ஜூலை மாதம் நடக்கிறது. மேற்கண்ட வெற்றியின் மூலம் இந்த போட்டிக்கு விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது. இது, 2018-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான தகுதி சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story