அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணிக்கு ஸ்ரீஜேஷ் கேப்டன்


அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணிக்கு ஸ்ரீஜேஷ் கேப்டன்
x
தினத்தந்தி 11 April 2017 8:43 PM GMT (Updated: 11 April 2017 8:42 PM GMT)

26–வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை சர்வதேச ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் வருகிற 29–ந் தேதி முதல் மே 6–ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

26–வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை சர்வதேச ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் வருகிற 29–ந் தேதி முதல் மே 6–ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒருமுறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி லீக் ஆட்டங்களில் வருகிற 29–ந் தேதி இங்கிலாந்தையும், 30–ந் தேதி நியூசிலாந்தையும், மே 2–ந் தேதி ஆஸ்திரேலியாவையும், மே 3–ந் தேதி ஜப்பானையும், மே 5–ந் தேதி போட்டியை நடத்தும் மலேசியாவையும் சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கேப்டனாகவும், மன்பிரீத்சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி வீரர்கள் வருமாறு:–

பி.ஆர்.ஸ்ரீஜேஷ், சுரஜ் கர்கெரா (கோல்கீப்பர்கள்), பர்தீப் மோர், சுரேந்தர் குமார், ரூபிந்தர்பால்சிங், ஹர்மன்பிரீத்சிங், குரிந்தர் சிங் (பின்களம்), ஷிங்லென்சனாசிங், சுமித், சர்தார்சிங், மன்பிரீத் சிங், ஹர்ஜீத்சிங், மன்பிரீத் (நடுகளம்), எஸ்.வி.சுனில், தல்விந்தர்சிங், மன்தீப்சிங், அபான் யூசுப், ஆகாஷ்தீப்சிங் (முன்களம்).


Next Story