உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா–மலேசியா இன்று மோதல்


உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா–மலேசியா இன்று மோதல்
x
தினத்தந்தி 21 Jun 2017 8:10 PM GMT (Updated: 21 Jun 2017 8:10 PM GMT)

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

லண்டன்,

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. தென்கொரியா, ஸ்காட்லாந்து அணிகள் கால்இறுதி வாய்ப்பை இழந்தன. இன்று நடைபெறும் 9–வது இடத்துக்கான இந்த இரு அணிகளும் மோதுகின்றன. இன்று நடக்கும் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மலேசியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் கால்இறுதிக்கு முன்னேறியது. மலேசிய அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் கால்இறுதிக்குள் நுழைந்தது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா–பாகிஸ்தான், நெதர்லாந்து–சீனா, இங்கிலாந்து–கனடா அணிகள் சந்திக்கின்றன.


Next Story