உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்திய அணி


உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்திய அணி
x
தினத்தந்தி 24 Jun 2017 8:52 PM GMT (Updated: 24 Jun 2017 8:52 PM GMT)

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5 முதல் 8 இடங்களுக்கான ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

லண்டன்,

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5 முதல் 8 இடங்களுக்கான ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 6–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது. இந்திய அணியில் ரமன்தீப்சிங் 8–வது மற்றும் 28–வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 27–வது மற்றும் 59–வது நிமிடத்திலும், தல்விந்தர்சிங் 27–வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத்சிங் 36–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அஜாஸ் அகமத் 41–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். இந்த தோல்வியின் மூலம் அடுத்த ஆண்டு (2018) புவனேஸ்வரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு பறிபோனது. முன்னதாக லீக் ஆட்டத்திலும் இந்திய அணி 7–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பதம் பார்த்து இருந்தது நினைவிருக்கலாம். மற்றொரு ஆட்டத்தில் கனடா அணி 7–3 என்ற கோல் கணக்கில் சீனாவை சாய்த்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 5–வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா–கனடா அணிகள் மோதுகின்றன.


Next Story