அகில இந்திய ஆக்கி: பெட்ரோலியம் அணி அதிர்ச்சி தோல்வி


அகில இந்திய ஆக்கி: பெட்ரோலியம் அணி அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 30 July 2017 9:30 PM GMT (Updated: 30 July 2017 6:58 PM GMT)

91-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

91-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பாரத் பெட்ரோலியம் அணி 3-4 என்ற கோல் கணக்கில் ஆக்கி பெங்களூரு அணியிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்தது. இதில் ஒரு கட்டத்தில் பெட்ரோலியம் அணி 3-2 என்று முன்னிலை பெற்றிருந்தது. கடைசி 10 நிமிடங்களில் பெங்களூரு வீரர்கள் ரகுநாத் (61-வது நிமிடம்), பிஜூயிர்கல் (63-வது நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து வெற்றியை வசப்படுத்தி விட்டனர். 2-வது தோல்வியை தழுவிய பெட்ரோலியம் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.

மற்ற ஆட்டங்களில் பஞ்சாப் தேசிய வங்கி அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஆக்கி ஒடிசாவையும், ராணுவ லெவன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலக அணியையும் தோற்கடித்தது.


Next Story