அகில இந்திய ஆக்கி: இந்தியன் ரெயில்வே அணிக்கு 3-வது வெற்றி


அகில இந்திய ஆக்கி: இந்தியன் ரெயில்வே அணிக்கு 3-வது வெற்றி
x
தினத்தந்தி 31 July 2017 9:45 PM GMT (Updated: 31 July 2017 7:22 PM GMT)

91-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

91-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆக்கி பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி அணியை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஆக்கி தமிழ்நாடு அணியை விரட்டியடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை தனதாக்கியது. தமிழ்நாடு அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஆக்கி ஒடிசா- மத்திய தலைமை செயலகம் (மாலை 4.15 மணி), ஓ.என்.ஜி.சி.-பஞ்சாப் நேஷனல் வங்கி (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன. 

Next Story