அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அணிக்கு 3–வது வெற்றி


அகில இந்திய ஆக்கி: பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அணிக்கு 3–வது வெற்றி
x
தினத்தந்தி 1 Aug 2017 9:00 PM GMT (Updated: 1 Aug 2017 8:46 PM GMT)

91–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

91–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 6–வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆக்கி ஒடிசா அணி 3–2 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலக அணியை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அணி 5–2 என்ற கோல் கணக்கில் ஓ.என்.ஜி.சி. அணியை வீழ்த்தி 3–வது வெற்றியை தனதாக்கியது.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஆக்கி தமிழ்நாடு–பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி (பிற்பகல் 2.30 மணி), இந்தியன் ரெயில்வே–பாரத் பெட்ரோலியம் (மாலை 4.15 மணி), ராணுவ லெவன்–பஞ்சாப் நே‌ஷனல் வங்கி (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story