அகில இந்திய ஆக்கி: அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே–ஓ.என்.ஜி.சி


அகில இந்திய ஆக்கி: அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே–ஓ.என்.ஜி.சி
x
தினத்தந்தி 3 Aug 2017 8:09 PM GMT (Updated: 3 Aug 2017 8:09 PM GMT)

91–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 8–வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஓ.என்.ஜி.சி. அணி 2–0 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலக அணியை

சென்னை,

91–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 8–வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஓ.என்.ஜி.சி. அணி 2–0 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலக அணியை தோற்கடித்து 3–வது வெற்றியை தனதாக்கியது.

மற்றொரு ஆட்டத்தில் ஆக்கி தமிழ்நாடு அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஆக்கி பெங்களூரு அணியை தோற்கடித்து 2–வது வெற்றியை ருசித்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்ற இந்தியன் ரெயில்வே, 2 வெற்றி, 2 தோல்வி கண்ட ஆக்கி பெங்களூரு அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

ஆக்கி தமிழக அணி 2 வெற்றி, 2 தோல்வி கண்டு சம புள்ளி வகித்தாலும் கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் தமிழக அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. ‘பி’ பிரிவில் 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்ற பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, 3 வெற்றி, 2 தோல்வி கண்ட ஓ.என்.ஜி.சி. அணி ஆகியவை அரைஇறுதிக்குள் நுழைந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே–ஓ.என்.ஜி.சி. (மாலை 4 மணி) அணியும், 2–வது அரைஇறுதிப்போட்டியில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி–ஆக்கி பெங்களூரு (மாலை 6 மணி) அணியும் மோதுகின்றன.


Next Story