அகில இந்திய ஆக்கி: ஓ.என்.ஜி.சி. அணி சாம்பியன்


அகில இந்திய ஆக்கி: ஓ.என்.ஜி.சி. அணி சாம்பியன்
x
தினத்தந்தி 6 Aug 2017 7:55 PM GMT (Updated: 6 Aug 2017 7:55 PM GMT)

91–வது எம்.சி.சி.– முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ஓ.என்.ஜி.சி. அணி 4–2 என்ற கோல் கணக்கில் ஆக்கி

சென்னை,

91–வது எம்.சி.சி.– முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ஓ.என்.ஜி.சி. அணி 4–2 என்ற கோல் கணக்கில் ஆக்கி பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஓ.என்.ஜி.சி. அணியில் திவாகர் ராம் (3–வது நிமிடம்), மன்தீப் அன்டில் (28–வது நிமிடம்), மச்சையா (30 மற்றும் 52–வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். வெற்றி பெற்ற ஓ.என்.ஜி.சி. அணிக்கு ரூ.5 லட்சமும், 2–வது இடத்தை பிடித்த ஆக்கி பெங்களூரு அணிக்கு ரூ.2½ லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.


Next Story