ஆண்கள் ஆக்கி: இந்திய அணியிடம் ஆஸ்திரியா தோல்வி


ஆண்கள் ஆக்கி:  இந்திய அணியிடம் ஆஸ்திரியா தோல்வி
x
தினத்தந்தி 17 Aug 2017 9:45 PM GMT (Updated: 17 Aug 2017 8:36 PM GMT)

இந்திய ஆண்கள் ஆக்கி அணி, ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

ஆம்ஸ்டெல்வீன்,

நெதர்லாந்துக்கு எதிரான போட்டி தொடரை இந்திய அணி 2–0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரியா அணிகள் மோதிய ஆட்டம் ஆம்ஸ்டெல்வீனில் நேற்று முன்தினம் நடந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4–3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரமன்தீப்சிங் 25–வது நிமிடத்திலும், 32–வது நிமிடத்திலும், ஷிங்லென்சனா 37–வது நிமிடத்திலும், 60–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

ஆஸ்திரியா அணி தரப்பில் ஆலிவர் பின்டெர் 14–வது நிமிடத்திலும், மைக்கேல் கோர்பெர் 53–வது நிமிடத்திலும், பாட்ரிக் 55–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.


Next Story