பள்ளி மாணவர்களுக்கான மாநில ஆக்கி போட்டி: திருச்சி அணி சாம்பியன்


பள்ளி மாணவர்களுக்கான மாநில ஆக்கி போட்டி: திருச்சி அணி சாம்பியன்
x
தினத்தந்தி 1 Sep 2017 11:26 PM GMT (Updated: 1 Sep 2017 11:26 PM GMT)

பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டியில் திருச்சி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

நெல்லை,

பாளையங்கோட்டை ஆக்கி நலச்சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பெல்பின்ஸ் கோப்பைக்கான 20-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 பள்ளிக்கூட அணிகளும், கேரளாவில் இருந்து ஒரு அணியும் கலந்து கொண்டன. போட்டிகள் காலையும், மாலையும் நடந்தன. இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியும், திருச்சி அணியும் மோதின. இதில் 6- 0 என்ற கோல் கணக்கில் திருச்சி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு பெல்பின்ஸ் நிர்வாக இயக்குனர் குணசிங் செல்லத்துரை தலைமை தாங்கினார். நெல்லை மண்டல கலால் துறை இணை இயக்குனர் நரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும் பரிசும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பெல்பின்ஸ் நிர்வாக இயக்குனர் சஞ்சய்குணசிங், ஆக்கி நலச்சங்க தலைவர் மேஜர் பெனடிக்ட், செயலாளர் ரமேஷ், பொருளாளர் மரியபாக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story