ஆசிய கோப்பை ஆக்கி போட்டில் சூப்பர் - 4 சுற்றில் மலேசிய அணியை இந்தியா வீழ்த்தியது


ஆசிய கோப்பை ஆக்கி போட்டில் சூப்பர் - 4 சுற்றில் மலேசிய அணியை இந்தியா வீழ்த்தியது
x
தினத்தந்தி 19 Oct 2017 1:47 PM GMT (Updated: 19 Oct 2017 1:47 PM GMT)

ஆசிய கோப்பை ஆக்கி போட்டில் சூப்பர் - 4 சுற்றில் மலேசிய அணியை 6-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.


டாக்கா,

 
8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. 

இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த மலேசியா, தென்கொரியா அணிகளும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. 2 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். இதன்முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். நேற்று மலேசியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்தியா- தென்கொரியா அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியா இன்றைய போட்டியில் மலேசியாவை எதிர்க்கொண்டது. மலேசியாவை  6-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா வரும் சனிக்கிழமை சூப்பர் - 4 சுற்றில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது.

Next Story