ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: இந்திய அணிக்கு 3–வது வெற்றி


ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: இந்திய அணிக்கு 3–வது வெற்றி
x
தினத்தந்தி 31 Oct 2017 10:09 PM GMT (Updated: 31 Oct 2017 10:09 PM GMT)

8 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவை சந்தித்தது.

ககாமிகாஹரா,

8 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3–வது வெற்றியை ருசித்ததுடன், தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியில் வந்தனா கட்டாரியா 54–வது நிமிடத்திலும், குர்ஜித் கவுர் 55–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மலேசியா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொள்கிறது.


Next Story