சீனாவின் ‘பேட்மிண்டன் கோட்டையை’ உடைத்து விட்டோம்– கரோலினா


சீனாவின் ‘பேட்மிண்டன் கோட்டையை’ உடைத்து விட்டோம்– கரோலினா
x
தினத்தந்தி 12 Jan 2017 11:00 PM GMT (Updated: 12 Jan 2017 7:46 PM GMT)

புதுடெல்லி, ஒலிம்பிக் பேட்மிண்டன் சாம்பியனும், தரவரிசையில் 2–வது இடம் வகிப்பவருமான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

பேட்மிண்டனில் சீனர்கள் தான் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களின் சுவரை (கோட்டையை) நான், பி.வி.சிந்து (இந்தியா), சாய்னா நேவால் (இந்தியா) உள்ளிட்டோர் உடைத்து விட்டதாக நினைக்கிறேன்.ஆனாலும் சீன வீராங்கனைகளுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே கடினமானது. ஏனெனில் அவர்களில் நிறைய பேர் பேட்மிண்டனை உயரிய தரத்துடன் விளையாடுகிறார்கள்.

காயம் குணமடைந்து களம் திரும்பியுள்ள சாய்னா நேவாலினால் மீண்டும் பழைய நிலையை எட்ட முடியும். அவருக்கு எதிராக ஆடுவது எப்போதுமே சவாலானது. பிரிமீயர் பேட்மிண்டன் லீக்கில் அவர் சிறப்பாக செயல்பட்டார். பிரிமீயர் பேட்மிண்டன் சிறப்பு வாய்ந்த ஒரு போட்டி. முன்னணி வீரர், வீராங்கனைகள் ஆடுவதால் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இது போன்ற போட்டிகளை உலகம் முழுவதும் நடத்த வேண்டும்.

இவ்வாறு கரோலினா மரின் கூறினார்.


Next Story