மலேசிய பேட்மிண்டன் போட்டி சாய்னா கால்இறுதிக்கு தகுதி


மலேசிய பேட்மிண்டன் போட்டி சாய்னா கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 19 Jan 2017 8:59 PM GMT (Updated: 19 Jan 2017 8:59 PM GMT)

மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சரவாக் நகரில் நடந்து வருகிறது.

சரவாக்,

மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சரவாக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-17, 21-12 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாடினியை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-12, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஹூசுன் யியை வீழ்த்தி கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி-ஜூவாலா கட்டா ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது. இதேபோல் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி இணையும் தோல்வியை தழுவியது.

Next Story