2019-ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடக்கிறது


2019-ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடக்கிறது
x
தினத்தந்தி 21 Feb 2017 8:47 PM GMT (Updated: 21 Feb 2017 8:46 PM GMT)

2019-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன், ரைபிள் அண்ட் பிஸ்டல்) போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

புதுடெல்லி, 

2019-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன், ரைபிள் அண்ட் பிஸ்டல்) போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் சங்க செயற்குழு கூட்டத்தில், போட்டியை நடத்த உரிமம் கேட்டு இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கி ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இது தகுதி சுற்றாகும். டெல்லியில் பிப்ரவரி 22-ந் தேதி முதல் மார்ச் 4-ந் தேதி இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 50 நாடுகளை சேர்ந்த 452 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story