துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 19 March 2017 7:58 PM GMT (Updated: 19 March 2017 7:58 PM GMT)

டெல்லி ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தின் போது, தனது அறையில் வைத்திருந்த விலை உயர்ந்த மூன்று செல்போன்கள் காணாமல் போய் விட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

* டெல்லி ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தின் போது, தனது அறையில் வைத்திருந்த விலை உயர்ந்த மூன்று செல்போன்கள் காணாமல் போய் விட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் அதை தீயணைப்பு வீரர் ஒருவர் தவறுதலாக எடுத்து சென்றிருப்பது தெரிய வந்தது. அந்த வீரர் டோனியின் செல்போன்களை போலீசில் ஒப்படைத்தார்.

*இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தேர்தலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு உறுப்பினர் ஓட்டு மட்டுமே இருக்க வேண்டும் என்று லோதா கமிட்டி பரிந்துரை செய்தது. இதை ஏற்க கிரிக்கெட் வாரியமும், மாநில சங்கங்களும் மறுத்தன. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் அதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் நிர்வாக கமிட்டி இறுதிசெய்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய சட்டதிட்டத்தின்படி மும்பை கிரிக்கெட் சங்கம் ஓட்டுரிமையை நிரந்தரமாக இழக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகள் பங்கேற்கலாம். ஆனால் ஓட்டு போட முடியாது. அங்கு இனி மராட்டிய மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு மட்டும் ஓட்டுரிமை இருக்கும்.

*ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் கூறுகையில், ‘5 இடக்கை ஆட்டக்காரர்களை கொண்ட எங்களது அணிக்கு, இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சை சமாளிப்பது கடும் சவாலாக இருக்கும். எனவே அவரது பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்வதற்குரிய வியூகங்களுடன் நாங்கள் களம் காண வேண்டும். அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். அனேகமாக நான் நினைத்த மாதிரியான ஆட்டத்தை கடைசி நாளில் நீங்கள் பார்ப்பீர்கள் என்று கருதுகிறேன். இது போன்ற சூழலில் நாங்கள் நிறைய பயிற்சி மேற்கொண்டு இருக்கிறோம். எனவே எங்களது வீரர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்வார்கள் (தோல்வியில் இருந்து தப்புவது) என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது.


Next Story