துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 23 March 2017 10:00 PM GMT (Updated: 23 March 2017 6:59 PM GMT)

*தசைப்பிடிப்பால் அவதிப்படும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஹாமில்டனில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

இதே போல் கடந்த டெஸ்டின் போது வலது கை ஆள்காட்டி விரலில் காயமடைந்த தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும் கடைசி டெஸ்டில் ஆடவில்லை. அவரது காயம் குணமடைய 6 வார காலம் வரை ஆகலாம் என்பதால், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுவது (டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக) சந்தேகம் தான்.

* லண்டனில் நடந்து வரும் இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 2–வது சுற்றில் 8–11, 7–11, 7–11 என்ற நேர் செட்டில் ரனீம் எல் வெலிலியிடம் (எகிப்து) வீழ்ந்தார்.

*வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி, இந்திய வீரர்களுடன் இணைந்து தர்மசாலாவில் பயிற்சியில் ஈடுபட்டாலும் அவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றும், கடைசி டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்றும் இந்திய அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் நேற்று அளித்த பேட்டியில், ‘முடிவு கிடைக்கக்கூடிய ஆடுகளமாக தர்மசாலா இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இந்திய அணி தொடரை கைப்பற்ற இங்கு வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அதனால் முடிவு கிடைக்கக்கூடிய வகையிலேயே ஆடுகளத்தை தயாரித்து இருப்பார்கள். இப்போது நெருக்கடி எல்லாமே இந்தியாவுக்கு தான். நாங்கள் டிரா செய்தாலே கோப்பையை தக்க வைக்க முடியும். ஆனால் நாங்கள் வெற்றி பெறவே விரும்புகிறோம். 2–1 என்ற கணக்கில் இந்திய மண்ணில் தொடரை வெல்வது என்பது அரிதாக நிகழக்கூடியதாகும்’ என்றார்.

* சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை எப்.சி. அணி 3–1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியனை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது. இன்று நடைபெறும் முதல் டிவிசன் லீக்கில் ஒய்.எம்.எஸ்.சி.–ரங்கூன் எப்.சி. (காலை 7 மணி), சீனியர் டிவிசன் லீக்கில் சென்னை சிட்டி எப்.சி.–விவா சென்னை (மாலை 5 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.


Next Story