கோடைகால தடகள பயிற்சி முகாம் சென்னையில் நாளை தொடக்கம்


கோடைகால தடகள பயிற்சி முகாம் சென்னையில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 24 April 2017 8:45 PM GMT (Updated: 24 April 2017 8:44 PM GMT)

இந்தியா ஸ்போர்ட்ஸ் புரமோ‌ஷன் அகாடமி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால தடகள பயிற்சி முகாம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 21–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

இதில் 10 வயதுக்கு மேற்பட்ட வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். தேசிய தடகளத்தில் சாதனை படைத்தவர்களான டாக்டர். ஆர்.நடராஜன், அண்ணாவி, நிஜாமுதீன் ஆகியோர் முகாமில் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கிறார்கள். முகாமில் பங்கேற்கும் நபர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த தகவலை இந்தியா ஸ்போர்ட்ஸ் புரமோ‌ஷன் இயக்குனரும், சுங்க இலாகா உதவி கமி‌ஷனருமான ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story