ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய வீராங்கனை சிந்து கால்இறுதிக்கு தகுதி


ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய வீராங்கனை சிந்து கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 27 April 2017 9:06 PM GMT (Updated: 27 April 2017 9:05 PM GMT)

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 15–வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரா

வுஹான்,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 15–வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அயா ஹோரியை சந்தித்தார். 40 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21–14, 21–15 என்ற நேர்செட்டில் அயா ஹோரியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 13–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அஜய் ஜெயராம், 32–ம் நிலை வீரரான சீன தைபேயின் ஜென் ஹாவை எதிர்கொண்டார். இதில் அஜய் ஜெயராம் 19–21, 10–21 என்ற நேர்செட்டில் ஜென் ஹாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.


Next Story