‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து இந்தியன் வங்கி அணி வெற்றி


‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து இந்தியன் வங்கி அணி வெற்றி
x
தினத்தந்தி 24 Jun 2017 8:34 PM GMT (Updated: 24 Jun 2017 8:33 PM GMT)

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க துணை சேர்மன் பி.பாலச்சந்திரன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். ரோமா குழும நிர்வாக இயக்குனர் ராஜன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், நிர்வாகிகள் ஜெகதீசன், கேசவன், உபைதுர் ரகுமான், தினகரன், பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன் ஆண்கள் பிரிவில் 26 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் சந்திக்கின்றன.

நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் டி.ஜி.வைஷ்ணவா அணி 25–8, 25–6 என்ற நேர்செட்டில் சென்னை ஸ்போர்ட்ஸ் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 25–9, 25–5 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் அணியை விரட்டியடித்தது. இன்னொரு ஆட்டத்தில் தூய இருதய அணி 25–15, 25–22 என்ற நேர்செட்டில் விஜய் பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் சேப்பாக் பிரண்ட்ஸ், எஸ்.டி.ஏ.டி. உண்ணாமலை, குருநானக் அணிகள் வெற்றி பெற்றன.


Next Story