மாநில தடகள போட்டி: செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி சாம்பியன்


மாநில தடகள போட்டி: செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி சாம்பியன்
x
தினத்தந்தி 25 Jun 2017 7:29 PM GMT (Updated: 25 Jun 2017 7:29 PM GMT)

சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில், 90–வது மாநில சீனியர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.

சென்னை,

சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில், 90–வது மாநில சீனியர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரண்டு நாட்கள் நடந்தது. 2–வது நாளான நேற்று ஆண்கள் பிரிவில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அரைஸ் ஸ்டீல் வீரர் யோகேசும் (15 நிமிடம் 15 வினாடி), 200 மீட்டர் ஓட்டத்தில் யு.எஸ்.எப். வீரர் நிதினும் (21.6 வினாடி), நீளம் தாண்டுதலில் செயின்ட் சோசப்ஸ் அகாடமியின் சபரி சங்கரும் (7.73 மீட்டர்), குண்டு எறிதலில் பொள்ளாச்சி எஸ்.டி.சி வீரர் சரவணனும் (15.31 மீட்டர்) தங்கப்பதக்கம் வென்றனர்.

பெண்கள் பிரிவில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணியை சேர்ந்த கீதாவும் (17 நிமிடம் 56.8 வினாடி), போல் வால்ட்டில் ‘டூ ஆர் டை’ அணி வீராங்கனை நிஷா பானுவும்(3.40 மீட்டர்), 800 மீட்டர் ஓட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. வீராங்கனை பிரியாவும் (2 நிமிடம் 16.2 வினாடி) முதலிடம் பிடித்தனர்.

போட்டி முடிவில் சிறந்த வீராங்கனையாக சந்திரலேகாவும் (இந்தியன் வங்கி அணி), சிறந்த வீரராக சபரி சங்கரும் (செயின்ட் ஜோசப்ஸ்) தேர்வு செய்யப்பட்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற சென்னையைச் சேர்ந்த செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி, 281 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தட்டிச்சென்றது. அரைஸ் ஸ்டீல் 2–வது இடத்தை பிடித்தது.

பரிசுகளை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம் வழங்கினார். பொருளாளர் லதா, அரைஸ் ஸ்டீல் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story