துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 15 Aug 2017 9:45 PM GMT (Updated: 15 Aug 2017 8:52 PM GMT)

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 28–ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.

*அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நேரடியாக கலந்து கொள்ளும் வகையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ‌ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாத தடையை அனுபவித்த ‌ஷரபோவா இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் களம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

*5–வது புரோ கபடி லீக் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் புனேரி பால்டன் அணி 34–17 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சையும், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் 27–24 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சையும் தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்– தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), குஜராத்–தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

*அமெரிக்காவின் சின்சினாட்டியில் நடந்து வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 6–7, 6–1, 6–4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கிறிஸ் எவ்பாங்ஸ்சை வீழ்த்தினார். முன்னதாக தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராம்குமார், உடல்நலக்குறைவால் பிரான்சின் கேல் மான்பில்ஸ் விலகியதால் கடைசி நேரத்தில் பிரதான சுற்றில் ஆடும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story