‘துரோணாச்சார்யா’ விருது பட்டியலில் இருந்து மாரியப்பனின் பயிற்சியாளர் நீக்கம்


‘துரோணாச்சார்யா’ விருது பட்டியலில் இருந்து மாரியப்பனின் பயிற்சியாளர் நீக்கம்
x
தினத்தந்தி 19 Aug 2017 9:33 PM GMT (Updated: 19 Aug 2017 9:33 PM GMT)

கடந்த ஆண்டு நடந்த ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா, இந்த ஆண்டுக்கான துரோணச்சார்யா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார். இதற்கிடையில் சத்யநாரயணா மீதான

புதுடெல்லி,

கடந்த ஆண்டு நடந்த ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா, இந்த ஆண்டுக்கான துரோணச்சார்யா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார். இதற்கிடையில் சத்யநாரயணா மீதான குற்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு விருது வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் சத்யநாராயணாவும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு விளக்கம் கடிதம் அனுப்பினார். அதில், ‘என் மீது பொறாமை கொண்ட சிலர் இத்தகைய பிரசாரத்தை செய்து வருகிறார்கள். நான் நிரபராதி என்று நிருபிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை அஸ்வினி நாச்சப்பா குற்றச்சாட்டு உள்ள நபருக்கு விருது வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மாரியப்பன் தனது பயிற்சியாளருக்கு விருது வழங்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து சத்யநாராயணா பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நீக்கம் செய்துள்ளது. அர்ஜூனா, துரோணச்சார்யா உள்பட விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட மற்ற அனைவரின் பெயர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Next Story