பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?


பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
x
தினத்தந்தி 20 Aug 2017 8:45 PM GMT (Updated: 20 Aug 2017 8:44 PM GMT)

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் இன்று முதல் 27–ந்தேதி வரை நடக்கிறது. இதில் 24 பேர் கொண்ட இந்திய அணியினர் மல்லுகட்ட இருக்கிறார்கள். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் (60 கிலோ உடல் எடைப்பிரி

பாரீஸ்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் இன்று முதல் 27–ந்தேதி வரை நடக்கிறது. இதில் 24 பேர் கொண்ட இந்திய அணியினர் மல்லுகட்ட இருக்கிறார்கள். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் (60 கிலோ உடல் எடைப்பிரிவு), ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான வினேஷ் போகத் (48 கிலோ), ஆசிய சாம்பியன்கள் பஜ்ரங் பூனியா (65 கிலோ), சந்தீப் தோமர் (57 கிலோ) உள்ளிட்ட இந்தியர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.


Next Story