கொரியா ஓபன் பேட்மிண்டன்: பிரதான சுற்றுக்கு காஷ்யப் தகுதி


கொரியா ஓபன் பேட்மிண்டன்: பிரதான சுற்றுக்கு காஷ்யப் தகுதி
x
தினத்தந்தி 12 Sep 2017 9:30 PM GMT (Updated: 12 Sep 2017 9:00 PM GMT)

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நேற்று தொடங்கியது.

சியோல்,

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன. இந்திய வீரரான காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் காஷ்யப் தகுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் 21–19, 21–19 என்ற நேர் செட் கணக்கில் லின் யு ஹிசைனை (சீனத்தைபே) வீழ்த்தினார். இதன் 2–வது ஆட்டத்தில் கான் சாவ் யூவை (சீனத்தைபே) 21–19, 21–18 என்ற செட் கணக்கில் தோற்கடித்து பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.

பிரதான சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. காஷ்யப் பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் மற்றொரு சீனத்தைபே வீரர் ஹிசு ஜென் ஹாவை எதிர்கொள்கிறார். இதே போல் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மங்கை பி.வி.சிந்து, ஹாங்காங் வீராங்கனை செங் நகன் யியுடன் மோதுகிறார்.


Next Story